இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா. இவர் இந்தியாவுக்காக உலக கோப்பையை வென்று கொடுத்த நிலையில் அதன் பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் போட்டிகளில் தற்போது வரை விளையாடி வருகிறார்.

இந்திய அணியில் இதுவரை அனைத்து உலகக்கோப்பை போட்டிகளிலும் இடம்பெற்ற வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவுக்காக அவர் செய்த அர்பணிப்பையும் விளையாட்டு திறமையையும் பாராட்டி தற்போது மத்திய அரசாங்கம் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.