தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் சமீபத்தில் எச்டி தரத்தில் முழு படமும் இணையத்தில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தை எச்.வினோத் இயக்கி இருந்த நிலையில் கேவிஎன் நிறுவனம் சுமார் 600 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக இதுவரை படம் வெளியாகவில்லை.
இந்த படத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் திடீரென இணையத்தில் லீக்கானதால் சர்ச்சை ஏற்பட்டது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் கிட்டத்தட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் படத்தை இணையத்தில் கசிய விட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
