புதுச்சேரியில் பாஜகவின் முக்கிய புள்ளியாக திகழ்பவர் முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன். இவர் பாஜகவில் மூன்று முறை மாநில தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணங்களில் ஒருவராக திகழ்ந்தவர்.
இவர் நியமன எம்எல்ஏ பதவியை பறித்த பிறகு கடுமையான அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் ஊழலற்ற அரசு அமைய விரைவில் முழு வீச்சில் செயல்படுவேன் என்றும் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
