உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பர்சானா பகுதியில் துறவியின் வேடமணிந்த நபர் ஒருவர் தெரு நாயை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் கோர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் விருஷ்பானு குண்ட் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனையடுத்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, “துறவிகள் வேடமணிந்து சமூக நம்பிக்கையை மோசமாக பயன்படுத்தும் போலி பாபாக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் பர்சானா பகுதியில் புதிதல்ல. சில மாதங்களுக்கு முன்னும் ராதா ராணி கோவிலில் இறைச்சி சமைத்து சர்ச்சை எழுப்பிய பாபா ஒருவர் குறித்து புகார் எழுந்தது. ஆனால் காவல்துறை இதுவரை எந்தவிதமான கடுமையான விசாரணையும் மேற்கொள்ளாதது மக்களிடம் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
தற்போது பர்சானா மற்றும் அதனை சுற்றியுள்ள பிரஜ்ஜ பகுதியில் சுற்றித் திரியும் போலி துறவிகள் மீது விசாரணை நடத்தி, அவற்றை அடையாளம் கண்டு, சமுதாயத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று மக்களின் கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.
