தெரு நாய்களை காப்பகங்களில் அடைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பை ஒத்திவைத்தது. அனைத்து தரப்பினரும் தங்கள் வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், “தெரு நாய்கள் விவகாரத்தில் ஏற்கனவே விதிமுறைகளும் சட்டங்களும் உள்ளன. ஆனால் அரசு செயலற்ற தன்மையால் இந்நிலை உருவாகியுள்ளது. எனவே மேம்போக்கான வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டாம்” என்று எச்சரித்தனர்.
இதனால், தெரு நாய்கள் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு, எழுத்துப்பூர்வ வாதங்கள் வந்த பிறகே இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
