
திருநள்ளாறு கோயில் பெயரில் மோசடி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தின் பெயரில் பல ஆண்டுகளாக போலி வெப்சைட் செயல்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளம் எனக் கூறி தரிசனம், அர்ச்சனை, அபிஷேகத்திற்கு கோடிக்கணக்கில் வசூல் செய்து மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.
அந்த வெப்சைட்டை நம்பி வெளிநாடு, வெளி மாநிலம் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏமார்ந்துள்ளனர். போலி வெப்சைட் தொடர்பாக கோயில் நிர்வாக அதிகாரி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திருநள்ளாறு பகுதியை சேர்ந்த அதிகாரிகள் முதல் முக்கிய நபர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.