விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்ற பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ், திமுக அரசு மீது கடும் விமர்சனங்களை தெரிவித்தார்.
கடந்த தேர்தலில் வன்னியர் சமூகத்திற்கு 10.5% இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்தும், அதனை நடைமுறைப்படுத்த திமுக நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் வன்னியர் சமூகத்தினரின் வாக்குகளை மட்டும் தேடி, உண்மையான உரிமைகளை மறுக்கும் திமுக அரசு சமூகநீதி துரோகத்திற்கு உத்தரவாதம் என்று விமர்சனம் செய்தார்.
மேலும், “10.5% இடஒதுக்கீட்டை வழங்காமல் வாக்கு மட்டும் கேட்பது ஏமாற்றம். வன்னியர்கள் இந்த அவமானத்திற்கு 2026 தேர்தலில் தக்க பதிலை வழங்க வேண்டும்” என அன்புமணி சுட்டிக்காட்டினார்.
இதனால் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பாமக திமுக கூட்டணியில் இருக்காது என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசி கொள்கின்றனர். எனினும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
