அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை மேடையில் வரவேற்ற பாஜக மாவட்ட நிர்வாகி பரமேஸ்வரி, அவரை “வருங்கால துணை முதலமைச்சரே!” எனக் குறிப்பிட, அங்கிருந்த அனைவரும் ஆச்சரியத்தில் விழித்தனர்.

தற்போதைய அரசியல் சூழலில் பாஜக கூட்டணி அரசாக வருமா அல்லது தனித்தனியாக ஆட்சி செய்யுமா என தற்காலிகமாக குழப்ப நிலை காணப்படுகின்ற நிலையில், இப்படியான பதவிக் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதை உடனடியாக உணர்ந்த நயினார் நாகேந்திரன், மேடையில் பதட்டமடைந்து, “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது” என பரமேஸ்வரியை நேரில் அறிவுறுத்தினார்.

பாஜக – அதிமுக இடையே தற்போதைய கருத்து வேறுபாடுகள் நிலவியபோதும், இவ்வகை வருங்கால பதவிகள் குறித்து மேடையில் பேசுவது அவசியமில்லை எனும் வகையில் அவர் தனது மறுப்பை  தெரிவித்தார். இந்த நிகழ்வு பாஜக கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடுகளை மேலும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.