கடலூர் அருகே தனியார் பள்ளியில் பயிலும் 6 வயது சிறுமிக்கு பள்ளி தாளாளரும், திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து, திமுகவின் அனைத்து பொறுப்பில் இருந்தும் பக்கிரிசாமி நீக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்த நிலையில் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பாலியல் சீண்டலுக்கு உள்ளான சிறுமி விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.