வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. பிற கட்சி நிர்வாகிகளை தங்களது கட்சியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி எந்த ஒரு அரசியல் கட்சியில் உறுப்பினராக இல்லாமல் சுதந்திரமாக கருத்தை தெரிவித்து வந்தார்.

இவர் சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகளை எதிர்த்து கேள்வி கேட்டார். தன்னை திமுக எதிர்ப்பாளராக காட்டிக்கொண்ட கஸ்தூரி அதிமுக மற்றும் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து கஸ்தூரி சிக்கலில் சிக்கினார்.

அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். தற்போது பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில் பாஜக மாநில தலைவர் முன்னிலையில் கஸ்தூரி பாஜகவில் இணைந்தார்.