நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆளுநர் ஆர்.எஸ் ரவி வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி சூழல் தொடர்ந்து சரிந்து வருவதாக குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டை மறுத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது, ஆர்.எஸ்.எஸ் மனநிலையுடன் எப்போதும் அரசு பள்ளிகள் மீது அவதூறு பரப்பும் ஆளுநர் அவர்களே ஏழை மாணவர்களின் படிப்பின் மீது அக்கறை உள்ளவர் போல நானும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காக நான்கைந்து மாதங்களுக்கு ஒரு முறை பள்ளிக்கல்வித்துறயை நோக்கி இப்படி பேசுவது உங்களின் வாடிக்கையாகிவிட்டது.

எங்கள் அரசு பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் நிகழ்த்தி காட்டும் சாதனைகள் எண்ணில் அடங்காதது. சாதனையாளர்களை மக்களும் திராவிட மாடல அரசும் கொண்டாடி வருகிறது. கமலாலயத்தின் ASER என்ற போலி அறிக்கையை உயர்த்தி பிடிக்கும் நீங்கள் அரசு பள்ளிகளின் மீது அக்கறை இருந்தால் டெல்லியை நோக்கி தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வி நிதி என்னவானது என்று கேளுங்கள் என்று சவால் விடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.