தமிழகத்தில் பல கட்ட பிரச்சனைகளுக்கு பிறகு பெரும்பான்மையை நிரூபித்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து ஒன்பது பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்திய நிலையில் பெரியார் திடலில் சென்று மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவுக்கு பதவி பிரமாணம் நடைபெற்ற நிலையில் தற்போது சட்டசபை கூடும் நேரம் குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி நாளை காலை 9:30 மணிக்கு சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற இருப்பதாகவும் அனைத்து எம்எல்ஏக்களும் நாளை பதவி ஏற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அதற்கு மறுநாள் தமிழக வெற்றி கழகம் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
