தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார்.
ஒரு நபர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால், ஏதாவது ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் ராஜினாமா கடிதத்தை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் வெங்கடரமணன் ஆகியோர் சட்டப்பேரவைச் செயலாளரிடம் நேரில் சென்று வழங்கினர்.
தமிழக அரசியலில் தவெக தலைவராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள விஜய், தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
