மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில், மணப்பெண் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவருக்கு இன்று திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அருண்ராஜ் மணமகனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்துக் கொண்டிருந்தபோது, அருகில் நின்றிருந்த மணப்பெண் எதிர்பாராதவிதமாக திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மணப்பெண் மயங்கி விழுந்ததைக் கண்டும் பதற்றமடையாத அருண்ராஜ், தான் கொண்டு வந்திருந்த மொய் கவரை (பரிசுப் பணம்) மணமகனிடம் ஒப்படைத்தார். மணப்பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் அங்கிருந்து உடனடியாக வெளியேறினார்.
இந்தச் சம்பவம் அங்கிருந்த கட்சித் தொண்டர்கள் மற்றும் உறவினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.