தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிகழ்வு, ஒட்டுமொத்த இந்திய அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்தச் சந்திப்பு குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின் அவர்கள், “தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளைத் தெரிவித்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 11, 2026
மேலும், “இந்தச் சந்திப்பின் போது, தமிழகத்தின் நிர்வாகம் மற்றும் மக்கள் நலப் பணிகள் குறித்த ஆலோசனைகளையும் அவருக்கு வழங்கினேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் கால மோதல்களைக் கடந்து, ஒரு மூத்த அரசியல் தலைவராக ஸ்டாலின் அவர்கள் வழங்கிய ஆலோசனைகளும், ஒரு இளம் முதல்வராக விஜய் அவர்கள் காட்டிய மரியாதையும் தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. “அரசியல் நாகரிகம்” என்ற ஸ்டாலின் அவர்களின் அந்த ஒற்றைச் சொல், தற்போது இணையத்தில் பேசுபொருளாகி வைரலாகி வருகிறது.
