உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டதை 18 வயதான தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் வென்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று தமிழ்நாடு அரசு சார்பில் குகேஷுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது முதல்வர் ஸ்டாலின் குகேஷை வாழ்த்தினார். பின்னர் அவருக்கு 5 கோடிக்கான  காசோலையை வழங்கி கௌரவித்தார்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் திறமையான செஸ் வீரர் வீராங்கனைகளை உருவாக்குவதற்காக Home of Chess என்ற சிறப்பு அகடமி உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். குகேஷின் வெற்றி கொடுக்கக்கூடிய நம்பிக்கை தொடர்ந்து தமிழ்நாட்டில் பல கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார். மேலும் ‌ உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குகேஷ் தமிழ்நாடு அரசின் உதவி இல்லாமல் கண்டிப்பாக என்னால் இதை சாதித்திருக்க முடியாது என்றும், இதற்காக துணை முதல்வர் மற்றும் முதல்வருக்கு நன்றி கூறுவதாகவும், செஸ் ஒலிம்பியாட் ஒரு வரலாற்று சிறப்பு ‌ மிக நிகழ்ச்சி என்றும் அதனை தமிழக அரசு ஏற்று நடத்தியது பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.