
இந்தியா வானிலை ஆய்வு மையம் தற்போது தமிழ்நாட்டில் இருந்து வடகிழக்கு பருவமழை விலங்கியதாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 104 நாட்களாக நீடித்த வடகிழக்கு பருவமழை தற்போது விலகி உள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் பெஞ்சல் புயலும் உருவானது. இதனால் தமிழகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை விலகிவிட்டது. மேலும் மேற்கிலிருந்து வீசும் காற்றின் வேகம் அதிகரித்ததால் வடகிழக்கு பருவமழை வில கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.