தீபாவளியை முன்னிட்டு, தமிழ்நாட்டில் பட்டாசு வெடிப்பதை ஒழுங்குபடுத்த தமிழக அரசு நேரம் குறித்த கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி தினம் காலை 6 மணி முதல் 7 மணி வரைக்கும், மேலும் மாலை 7 மணி முதல் 8 மணி வரைக்கும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நேர நிர்ணயம் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொது மக்களின் நலன் கருதி செயல்படுவது தமிழக அரசின் நோக்கமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறைந்த ஒலி, குறைந்த மாசு ஏற்படுத்தும் வகையான பசுமை பட்டாசுகள் (Green Crackers) மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறுபவர்கள்  மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. தீபாவளி காலத்தில் வாகன போக்குவரத்து மற்றும் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படாதவாறு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது