தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் சென்சார் மற்றும் பட தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய வாதங்களை முன் வைத்துள்ளது.

அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதியைச் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில் தற்போது வருகிற 27ஆம் தேதி ஜனநாயகன் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் முன்னதாக இந்த படத்திற்கு தனி நீதிபதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்த நிலையில் அதனை எதிர்த்து  சென்சார் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.