தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 233 எம்எல்ஏக்களும் இன்று பதவி பிரமாணம் செய்து கொள்கிறார்கள். இதோடு இன்றைய சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடையும் நிலையில் நாளை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு சட்டசபையில் தமிழக வெற்றிக்கழகம் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.
இந்த நிலையில் நேற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட விஜய் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பிறகு திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலினையும் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவையும் சந்திக்க இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதன்படி இன்று பிற்பகல் 2:30 மணிக்கு ஸ்டாலினையும் மாலை 3:30 மணிக்கு வைகோவையும் முதலமைச்சர் விஜய் சந்திக்க இருக்கிறார். மேலும் திமுக மற்றும் பாஜகவை தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தின் போது விஜய் கடுமையாக விமர்சித்து பேசிய நிலையில் இன்று மூத்த தலைவர்களை அவர் சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
