தமிழகத்தில் இன்று காலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தமிழக வெற்றிக்கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது ஆட்சி அமைக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதிமுக திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் என கடுமையான போட்டிகள் நிலவிய நிலையில் பல இடங்களில் தமிழக வெற்றிக்கழகத்தினர் அதிரடியாக வெற்றி பெற்றுள்ளனர்.

அதே நேரத்தில் திமுக மற்றும் அதிமுகவும் தங்களுடைய இருப்பை வசப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தென்காசி தொகுதியில் திமுக கட்சியின் சார்பில் போட்டியிட்ட கலை. கதிரவன் வெற்றி பெற்றுள்ளார். அதன் பிறகு பண்ருட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கே. மோகன் வெற்றி பெற்றுள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக கட்சியின் வேட்பாளர் சிவக்குமார் 910. வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.