நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), புதுச்சேரியில் போட்டியிடுவதில் தொழில்நுட்ப ரீதியான சிக்கல் எழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) விதிமுறைகளின்படி, ஒரு கட்சி ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் போட்டியிட விரும்பினால், அதுகுறித்த விவரத்தைத் தனது விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். ஆனால், தவெக சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் தமிழ்நாடு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரி மாநிலம் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால், தவெக புதுச்சேரியில் தனது கட்சிச் சின்னத்தில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளையில், புதுச்சேரியில் மட்டும் மாற்றுச் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் மற்றொரு தகவல் பரவி வருகிறது. இது குறித்து கட்சித் தலைமையிடமிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது