வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சற்று நேரத்தில் பெங்கல் புயலாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு ரெட், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதால் தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகிறது.

அதன்படி தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நாளை திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் நாளை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.