தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாளும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இன்று காலை முதல் திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக தற்போது மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.
