தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது. அதே சமயம் ஒரு சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு நாளையும் அடுத்த நாளும் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை மே 19ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மே 20ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பேரிடர் மீட்பு குழுவினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.