சென்னையில் தொடர்ந்து ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று புதிய உச்சமாக 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 2960 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 1,22,640 ரூபாய்க்கும், ஒரு கிராம் 15,330 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 16,724 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,33,792 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 13 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு கிராம் 400 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 4,00,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.