அக்டோபர் மாத தொடக்கம் முதலே சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்றும் நிலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண சங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 57,280 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 7,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 7615 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 60 ஆயிரத்து 920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கடந்த 12ஆம் தேதியிலிருந்து வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 103 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 103000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை 57 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டு விற்பனையாவது நகை பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
