தங்கம் விலை மீண்டும் உயர்த நிலையில், இன்று (அக்.25) சவரனுக்கு ரூ.800 உயர்வடைந்துள்ளது.
அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.100 உயர்ந்து ரூ.11,500-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக நேற்று மாலை நேர வர்த்தகத்தில் தங்க விலை ரூ.1,120 குறைந்திருந்த நிலையில், இன்று ஏற்பட்ட மாற்றம் முக்கியமானதாயும், தங்க முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதாகும்.
இந்நிலையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.170 என்றும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,70,000 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
