
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது ஒவ்வொரு டிவி சேனல்களும் தங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ABP, People’s Pules, P MARQ, Matrix Survey, Times Now, Chankya strategies ஆகிய சேனல்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜக கூட்டணி தான் வெல்லும் என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி 152 முதல் 160 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே கூட்டணி 130 முதல் 138 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஜார்கண்ட் மாநிலத்திலும் பாஜக கூட்டணி 45 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்று வெள்ளம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் மகராஷ்டிரா மாநிலத்தில் இன்று மந்தமான நிலையிலேயே வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜக கை ஓங்கியுள்ளது.