
சென்னை வடக்கு மற்றும் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம் செய்து தலைமைக் கழக அறிவித்துள்ளது.
சென்னை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக ஆர்.டி.சேகர் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த இளைய அருணா விடுவிக்கப்பட்டுள்ளார். அதேபோல பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக வி ஜெகதீசனை நியமித்துள்ளது திமுக தலைமை கழகம்.
பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் ஆக இருந்த குன்னம் ராஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது
சென்னை வடக்கு மற்றும் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்
– தலைமைக் கழக அறிவிப்பு pic.twitter.com/OIVat3wnQC
— DMK (@arivalayam) February 27, 2024