சென்னை எண்ணூர் கோரமண்டல் ஆலையில் நள்ளிரவு ஏற்பட்ட வாயு கசிவால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வாயுவை சுவாசித்த 30க்கும் மேற்பட்ட மக்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அதில் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கோரமண்டல் ஆலைக்கு கடல் வழியாக வாயு எடுத்துச் செல்லும் குழாயிலிருந்து அம்மோனியா வெளியானதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.