
கடந்த சில தினங்களாக வெயில் வாட்டிவந்த வேளையில் இன்று சென்னையின் பல இடங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது. வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, நந்தனம், தேனாம்பேட்டை, கிண்டி, ராமாபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. அதேபோல், புறநகர்பகுதிகளான தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் கடும் அவதியடைந்துள்ளனர்.