விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் எல்கேஜி படித்த 4 வயது ரியா லட்சுமி என்ற சிறுமி செப்டிக் டேங்க் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் வாய்மொழியாக தகவல் கூறியுள்ளனர். நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் சிறுமி உயிரிழந்து உள்ளதாக பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.