சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்புக்கான (SIMI) தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 1977ல் தொடங்கப்பட்ட சிமி அமைப்பானது, சதி வேலைகளில் ஈடுபடுவதாக கூறி மத்திய அரசு 2001ல் தடை விதித்தது. அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வரும் இந்த தடையானது, நாளை மறுநாளுடன் (ஜன.31) முடியும் நிலையில் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.