தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து வெளிநாடு புறப்பட்டார். சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் முதல்வர் ஸ்டாலின் 9 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்திற்கு முதலீடுகள் ஈர்க்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.  இன்று சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். பல முக்கிய நிறுவனங்களுடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.