தமிழக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் வருமானத்துக்கு அதிகம் சொத்து சேர்த்ததாக அவரது வீடுகளில் சென்ற 2021-ம் வருடம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது. இதனடிப்படையில் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப் பத்திரிக்கை லஞ்ச ஒழிப்பு துறையால் திங்கட்கிழமையான நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு மீதான விசாரணை லஞ்ச ஒழிப்பு துறையால் காவல்துறையினரால் தொடர்ந்து நடந்து வந்தது.

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் 216 பக்கங்களை கொண்ட குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் மீதான வழக்குகள் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. இது அரசியல் களத்தில் எதிரொலிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளது.