விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப்பட்டியில் உள்ள எக்ஸெல் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், பாண்டி என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கோர விபத்தில் மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்ததால், இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கியுள்ளனரா என்பதை அறிய தீயணைப்புத் துறையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து. தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்
.
.
.#Sattur #FireAccident #Explosion #crackers #nambikkainews pic.twitter.com/o30kke1zJU— Nambikkai India (@Nambikkai_India) April 13, 2026
“>
இந்த விபத்து குறித்து வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
