தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் பல மக்களுக்கு தன்னுடைய அறக்கட்டளை மூலமாக ஏராளமான உதவிகளை செய்து மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் முதல் குழந்தைகள் வரை ஆதரவற்றோருக்காக பல நன்மைகளை அவர் செய்கிறார். இந்த நிலையில் நடிகர் விஜயின் நெருங்கிய நண்பராக இருக்கும் ராகவா லாரன்ஸ் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாக சமீப காலமாகவே செய்திகள் வெளி வருகிறது.
நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழக வெற்றி கழகத்தில் சேர்வது தொடர்பாகவும் அப்படி சேர்ந்தால் ஆதரவு கொடுப்பீர்களா என்றும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கேட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதாவது திருச்சி கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வருகிறது. நான் தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கை பற்றிய முக்கியமான ஒரு முடிவை வருகிற வியாழக்கிழமை ஜூன் 11ஆம் தேதி காலை 9:30 மணிக்கு அறிவிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவாரா இல்லையா என்பது அன்றைய தினம் தெரிந்துவிடும்.
