ஜெ., பிறந்தநாளை முன்னிட்டு இபிஎஸ் உற்சாகமாக ட்வீட் செய்துள்ளார். தனது படம் இருந்த ட்விட்டர் டிபியை மாற்றி, 75 என்ற எண்ணுடன் கூடிய ஜெ.. படத்தை தற்போது டிபியாக வைத்துள்ளார். மேலும் துரோகிகளையும், எதிரிகளையும் தகர்த்தெறிந்து கழகத்தை காத்தவர் ஜெயலலிதா. அதிமுக மக்களுக்காக எப்போதும் இயங்கும். ஜெ., நூற்றாண்டு கனவை நிறைவேற்ற உறுதியேற்று அவர் புகழை போற்றி வணங்குகிறேன் என ட்வீட் செய்துள்ளார்.