சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கண்டனம் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் அவருடைய கட்சியினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற கொடும் குற்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். மேலும் சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தி அனைவருடைய பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.