விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை எட்டாம் தேதி மாலை 6 மணிக்கு பிறகு வெளிநபர்கள் நுழையவும் தங்கி இருக்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவை மேற்கொள்ளக்கூடாது எனவும் இதை மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.