
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதல் மூலம் தீவிரவாதிகளின் இடங்கள் மட்டுமே அழிக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று கூறி இருந்த நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதன்படி எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 13 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் 59 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாக தற்போது வெளியுறவு துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும் இந்திய இலக்குகள் மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டதும் சுடுவதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.