
சத்தீஸ்கர் மாநில முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய் மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். பழங்குடியின தலைவரான விஷ்ணு தியோ சாய் சத்தீஸ்கர் மாநில முதல்வராக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் மோடியின் முதல் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றியவர் விஷ்ணு தியோ சாய்.

விவசாயியான விஷ்ணு தியோ சாய் பாஜக மாநில தலைவராகவும் எம்பியாகவும் பதவி வகித்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் உள்ள 90 இடங்களில் பாஜக 54 இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
Raipur: On becoming the new Chief Minister of Chhattisgarh, Vishnu Deo Sai says "Today, I have been unanimously chosen as the leader of the legislative assembly. I am thankful to PM Modi, Union HM Amit Shah and BJP national president JP Nadda for showing trust in me." pic.twitter.com/e8lRd8BbfO
— ANI (@ANI) December 10, 2023