
நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் ஆறு இந்தியர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் காயம் அடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. உயிரிழந்த இந்தியர்களின் உடல் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப தீவிர ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.