தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை (மே 10) முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற ஆர்வம் எகிறியுள்ளது. இதில் ஒரு முக்கியத் திருப்பமாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு அவர்களும் விஜய்யுடன் இணைந்து அமைச்சராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே தவெக ஆட்சி அமைக்க 120 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அதில் விசிகவின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது. திருமாவளவன் கொள்கை ரீதியான சில விமர்சனங்களை முன்வைத்தாலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அடிப்படையில் வன்னி அரசுக்கு முக்கிய இலாக்கா ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
நாளை மதியம் 3:15 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் இந்த பிரம்மாண்ட விழாவில், ஒரு புதிய கூட்டணியின் கீழ் தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் பயணம் தொடங்கப்போகிறது.
விஜய்யின் அமைச்சரவையில் வன்னி அரசு போன்ற ஒரு தீவிரமான அரசியல்வாதி இடம் பெறுவது, இந்த ஆட்சியின் செயல்பாடுகள் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
