வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசின் பிரிட்ஜ் பகுதியில் செய்யப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்துள்ளார். மேலும் சாலையில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது கொட்டும் மழையில் முதலமைச்சர் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
