
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. அந்த வகையில் நேற்று மதுரையில் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

குறிப்பாக திருப்பரங்குன்றம் அருகே உள்ள வளையகுளம் பகுதியில் மழையின் போது திடீரென ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அம்மா பிள்ளை (65), வெங்கட்டி(55), வீரமணி (10) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதாவது மழையின் போது மின்தடை ஏற்பட்டதால் மூவரும் வீட்டின் வெளிய அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.