தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தவரும் அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான குண்டு கல்யாணம் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் சமீப காலமாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போதிய பண வசதி இல்லாமல் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருவதாக செய்திகள் வெளியானது.

இதைத்தொடர்ந்து குண்டு கல்யாணத்திற்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குண்டு கல்யாணத்தின் மருத்துவ செலவை அதிமுக கழகம் ஏற்கும் என அறிவித்துள்ளார். மேலும் இதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு பலரும் நன்றி தெரிவித்து வரும் நிலையில் குண்டு கல்யாணத்திற்கு என்ன பிரச்சனை என்ற செய்தி வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.