சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாக மாற்றமின்றி இருந்த நிலையில் நேற்று உயர்த்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 81,760 ரூபாய்க்கும், ஒரு கிராம் 10,220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 143 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 143000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
