
ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். சமீபத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் பயன்பாட்டுக்கான விலை 50 ரூபாய் வரை உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு கடந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்த நிலையில் இந்த மாதம் விலை குறைந்துள்ளது.
அதன்படி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.15.50 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் சென்னையில் 19 கிலோ வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.1906-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அதே நேரத்தில் வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.